கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

0
25

அனைத்து தபால் ஊழியர் சங்கத்தினர் இணைந்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக தற்போது இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மற்றும் கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தீர்வுகோரல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 4 மணி தொடக்கம் தொடர்ந்து 48 மணிநேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் ஊழியர் சங்கத்தினர் அரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here