கல்வி முறைகளில் மாற்றம் : ஜனாதிபதி!

0
6

இலங்கையிலுள்ள மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி – ஹால் டி கோல் விடுதியில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது உலகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது.

அதற்கமைய, இலங்கையின் கல்வி முறையும் நவீனத் தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும்.

அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கல்வியைத் தொடங்கிச் சில வருடங்கள் ஆகிறது.

இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சி தேவைப்படும்.

அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here