பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தைக் குறைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, மாதம் ஒரு முறை எரிபொருள் விலையைத் திருத்தும் போது கட்டணத்தைக் குறைக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகரத் தெரிவித்துள்ளார்.