எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும்

0
36

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2024 முதல், எரிவாயு மீது 18% VAT வரி சேர்த்து விலை அதிகரிக்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
அதன்படி, தற்போது ரூ.3565 ஆக இருக்கும் 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் 18%, அதாவது ரூ.640 ஆல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விலை விபரங்கள் ஜனவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளது.
வரி அதிகரிப்புடன் இந்த முடிவு எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here