காசாவில் இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதலில் 274 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கும் நோக்கில் இஸ்ரேல் குறித்த தாக்குதலை நடத்தியிருந்தது.
இந்தத் தாக்குதலில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.