உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்லவுள்ளார். அவர் எதிர்வரும் 23ஆம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
கடந்த மாதம் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அது பரவலாக விமர்சிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் இந்தியப் பிரதமர் உக்ரைனுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ரஷ்ய மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து நரேந்திர மோடி உக்ரைன் செல்வது இதுவே முதற்தடவையாகும்.
இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்துக் கலந்துரையாடப்படும் எனக் குறிப்பிடப்படுகின்றது.