தற்போது நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் வேளையில், புதிய வகை வரிகளை மக்கள் மீது விதிக்கச் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தரப்பில் நின்று சிந்திக்காமல் மக்கள் மீது வரம்பற்ற அழுத்தத்தைத் திணிக்கும் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்பட்டதே இதற்குக் காரணமாகும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
IMF பங்கேற்பில் நாட்டைக் கட்டியெழுப்புவது யதார்த்தமானதும் நடைமுறையானதுமான விடயம் ஒன்றாக அமைந்தாலும், முதுகெழும்பை நிமிர்த்திக் கொண்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கும், மக்களை மையமாகக் கொண்ட ஒப்பந்தத்தை எட்டுவது அரசின் பொறுப்பாகும். அரச வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனமையினாலயே புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன. மேலதிக வரிகளை விதிக்காமல் வரி அறவீட்டுத் வேலைத்திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.