கூகுள் மெப்பை (Google Map) நம்பி பாலைவனத்தில் பயணம் செய்த இந்திய இளைஞர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த குறித்த இருவரும் உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அலி காலி பாலைவனத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த இருவரும் கூகுள் மெப்பை (Google Map) நம்பி பாலைவனத்தின் ஆபத்தான இடத்தில் சிக்கி 4 நாட்களாக வழி தெரியாமல் சுற்றித் திரிந்துள்ளனர்.
இந்தநிலையில் வெப்பம் உச்சத்திலிருந்ததால், நீரிழப்பு மற்றும் கடுமையான சோர்வு காரணமாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் பணிக்கு வராததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர்க் குறித்த இருவரும் பாலைவனத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் இந்தியா மற்றும் சூடான நாட்டைச் சேர்ந்த இருவரே பலியாகினர்.