கதிர்காம விகாரையைச் சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தெடகமுவ கனிஷ்ட வித்தியாலயம், கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் உயர் வித்தியாலயம், சசீந்திர குமார மாதிரி ஆரம்பப் பாடசாலை மற்றும் கோதமி கம கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவை மூடப்படவுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையின் வருடாந்த அசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கதிர்காமம் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.