சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் தனது பல கிளைகள் ஊடாக ஒக்டேன் 100 பெட்ரோல் இன்று முதல் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கையில் XP100 இன் உத்தியோகபூர்வ அறிமுகம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு Ninewells LANKA IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் LIOC தலைவர் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்படி, குறித்த வகைப் பெட்ரோலை விற்பனை செய்யும் உலகின் எட்டாவது நாடாக இலங்கை (Sri Lanka) மாறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.