ஹஜ் – அக்கரைப்பற்று யாத்திரிகர் ஒருவர் மரணம்!

0
7

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த 68 வயதான யாத்திரிகர் ஒருவர் மரணமடைந்ததாக இலங்கையின் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அவரது ஜனாசா புனித மக்காவில் உள்ள மன்னர் அப்துல் அசீஸ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாசாவை புனித மக்காவில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று 6, முஸ்லிம் மத்திய கல்லூரி வீதியைச் சேர்ந்த அல்-ஹாஜ் ஆதம் லெப்பே அப்துல் கஃபூர் என்பவர் மாரடைப்பால் இவ்வாறு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here