ஆதித்யா எல்-1 விண்கலம்!

0
9

மே மாதத்தின் போது சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களைப் பதிவு செய்து, இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. இந்த வண்ணமயமான படங்களை இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023ம் ஆண்டுச் செப்., 2ம் திகதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தாண்டு (2024) ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.

சமீபத்தில், ஆதித்யா -எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம் பிடித்துப் பூமிக்கு அனுப்பி இருந்தது. இந்நிலையில், மே மாதத்தின் போது சூரியனின் இயங்குநிலை புகைப்படங்களைப் பதிவு செய்து, ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. இந்தப் படங்களை இன்று (ஜூன் 10) இஸ்ரோ எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. புகைப்படங்கள் சூரியனின் ஆற்றல்மிக்கச் செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here