தற்போது டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் துரிதமாக இடம்பெற்று வருவதோடு, இதன்போது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், நாளாந்தம் மாற்றமடையும் தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் அனைத்துத் தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக்கழகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதோடு, புதிய விடயப்பரப்புகளை உள்ளடக்கிய பாடநெறிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நவீன உலகிற்கு ஏற்றவாறு தொழில் கல்வியை மறுசீரமைத்து, இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் போட்டித்தன்மை நிறைந்த உலகத் தொழில் சந்தையில் வெற்றிப் பெறுவதற்கு உகந்த சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.