பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். அவரது கட்சியான அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட 300 தொகுதிகளில் 223 தொகுதிகளில் வெற்றிப் பெற்றதாக அறிவித்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி, தேர்தலில் மோசடி செய்ததாகக் கூறி, வாக்கெடுப்பைப் புறக்கணித்தது.
இந்நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற அவாமி லீக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.