எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாகப் பயணித்த படகு லிபியா அருகே மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 13 பயணிகள் இருந்த படகில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக லிபியா அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.