இணைய வழி நிதி மோசடி !

0
4

இணையவழி நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகக் கணினி அவசரநிலைப் பதில் மன்றம் தெரிவித்துள்ளது. நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் இந்த வருடத்தில் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

“செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடக சம்பவங்கள் தொடர்பானவை. இணையச் சம்பவங்களை நேரடியாக எடுத்துக் கொண்டால், 20% முறைப்பாடுகள் இணைய மோசடிகளில் சிக்கியவர்களிடமிருந்து வந்தவை. இவற்றில், இணைய வங்கிச் சேவையைக் குறிவைத்து, கடவுச்சொற்கள், தாற்காலிகக் கடவுச்சொற்கள் தொடர்பான 340 முறைப்பாடுகள் அதிகளவில் உள்ளன. வங்கிக் கணக்கை அணுகப் பயன்படும் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அந்தத் தளத்தைச் சரியாக அடையாளம் காணாததால் இந்த மோசடிகளில் சிக்கியுள்ளனர்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here