இருபதுக்கு 20 தொடர் – ஜோஸ் பட்லர் விலகல்!

0
4

அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர், மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்கு இங்கிலாந்து அணியின் தலைவராக விக்கெட் காப்பாளரும் அதிரடி வீரருமான பிலிப் சால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் இருபதுக்கு 20 அணித் தலைவரான ஜோஸ் பட்லர் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாகச் சகலதுறை வீரர் ஜேமி ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here