கமிந்து மெண்டிஸ் அடித்த சிக்சரில் ஒருவர் காயம்!

0
3

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய போது கமிந்து மெண்டிஸ் அடித்த பந்து தலையில் விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

MCC Marleybone கிரிக்கெட் கழகத்தின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். கமிந்து மெண்டிஸ் அடித்த பந்தைப் பிடிக்க முற்பட்டபோதே அவர் காயமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் கமிந்து மெண்டிஸ் அவரை நேரில் சென்று பார்வையிட்டதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here