தேசிய காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (11) நடைபெற்றது.
இதன்போது 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது சமூக – பொருளாதார நிலைகளைக் கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.