இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ராஷித் கான் படைத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் ராஷித், ஹுசைனின் விக்கெட்டை வீழ்த்தி இந்தச் சாதனையினைப் படைத்துள்ளார்.
92 போட்டிகளில் அவர் இந்த எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதாக விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.