‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடருமா ?

0
16

பணயக் கைதிகளை விடுவிக்க ஏதுவாகஇ 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ அறிவித்துள்ளார்.
இது பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது ‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும். ஹமாஸை முழுவதுமாக அழித்துஇ பணயக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காசாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு. அதேநேரம் அனைத்து பணயக் கைதிகளை திரும்ப பெறவும் இஸ்ரேலுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்கவும் மீண்டும் போர் தொடங்கும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ‘‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது” என்று தெரிவித்திருந்தார். தற்போது 4 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை ஹமாஸ் அமைப்பும் வரவேற்றுள்ளது.

50 பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில்இ இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here