ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றிய தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்து வெளியிடப்பட்ட கடிதம் மீளப்பெறப்படுமா, இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதற்குப் பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவியிலிருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராகத் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான A.H.M.D.நவாஸ், ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.