கொழும்பு – பேலியகொடையில் இன்று (24) சில மீன் வகைகளின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோகிராம் சாலயா மீனின் மொத்த விலை 550 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பலயா மீனின் மொத்த விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் மத்தி மீனின் மொத்த விலை 1,000 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா மீனின் மொத்த விலை 750 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.