மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் 60 ஆகக் குறைப்பு!

0
2

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவின் தீர்மானத்தின்படி, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் கீழ், விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசுகளுடன் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையின் படி, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அதிகப்படியான அதிகாரிகள் இருந்தால், அவர்கள் நாளை (நவம்பர் 2) பொறுப்பான டிஐஜியிடம் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும், அதிகப்படியான வாகனங்கள் இருந்தால், அவற்றைப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here