புதிய ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

0
43

பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள மலையகம் தொடர்பான விடயங்களை விரைவாகச் செயற்படுத்துவதற்குப் புதிய ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு அன்று கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அலகொல்ல லகிலேண்ட் கம்பாஹா கேகீல்ஸ்
பகுதிகளுக்கு விஜயம் செய்து நிவாரணப் பொருட்களைக் கையளித்திருந்தார் அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்றைய தினம் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைத்திருந்தோம் வெகு விரைவில் அவர்களுக்குரிய கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் முன்னின்று செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் கள விஜயம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

இம்முறை பாதிட்டில் பெருந்தோட்ட மலையக மக்கள் சார்பாகப் பல்வேறு வேலை திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது இவ்வேளை திட்டங்கள் சரியாகவும் துரிதகதியில் மக்களைச் சென்றடைய ஜனாதிபதியின் கீழ் விசேடமாகச் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுப் பொறுப்புவாய்ந்த தலைவர் ஒருவர் நிமிக்கப்பட வேண்டும் என்பதே எம்முடைய வேண்டுகோளாக இருக்கின்றது .

 

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சில் விசேட கலந்துரையாடல் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தொழில் துறை எதிர்கொள்ளும் பிரச்சனை பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் வாழ்க்கை செலவிற்கு ஏற்றார் போல அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்குச் சம்பளம் அதிகரித்ததைப் போன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும்.என்ற நிலைப்பாட்டை முன்மொழிந்திருந்தோம்

கடந்த காலங்களைப் போல் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு நலன்புரி வேலை திட்டங்களும் உள்வாங்கப்பட்டுச் சம்பள உயர்வை உயர்த்துவதா? அல்லது
சம்பள நிர்ணய சபையின் ஊடாக வேதனத்தை உயர்த்துவதா? என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்வு செய்யக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்று ரீதியில் தற்போதைய வாழ்க்கை செலவிற்கு ஏற்றார் போல் வழமை மாறாத சலுகைகளுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தொழில் அமைச்சருக்கு அழுத்தமாக எடுத்துரைத்திருந்தோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here