பியூமி : 08 மாதங்களில் 148 மில்லியன்!

0
7

பணமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாகச் சொத்து சோதனையை எதிர்கொண்டுள்ள மாடல் அழகி பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான ஒரே வியாபாரமான LOLLIA SKIN CARE (Pvt) Ltd தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸார் தற்போது ஆரம்பித்துள்ளது.

வியாபார நாமமாகத் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள், பியூமி ஹன்சமாலியின் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகள், பிணைதாரர்கள் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகள் குறித்த அறிக்கைகள் பொலிஸாருக்குத் தற்சமயம் கிடைத்துள்ளன.

பியூமி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் நடத்தி வரும் நிதி நடவடிக்கைகளுடன் அந்தத் தகவலுடன் மட்டுமின்றி மத்திய வங்கியின் தரவுகளிலிருந்தும் உறுதிப்படுத்த விசாரணை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

இவர் நடத்தும் LOLLIA SKIN CARE (Pvt) Ltd என்ற நிறுவனம் ‘Piumiskin’ என்ற சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில் விசாரணை நடத்திய விசாரணை அதிகாரிகள் தற்போது அந்த வியாபாரத்தினைப் பதிவு செய்தது தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுள்ளனர்.

வர்த்தகம் என்ற பெயரில் ஆரம்பிக்கட்ட வங்கிக் கணக்குகள், பியூமி ஹன்சமாலியின் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகள், பிணைதாரர்கள் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகள் பற்றிய தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ள நிலையில், வெலிபல் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கும்போது அந்தப் பதிவுகளையே தனது சொத்துக்களாகப் பியூமி ஹன்சமாலி காட்டியுள்ளார்.

கொழும்பு 07, வார்ட் பிளேஸில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியின் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள பிரதம கணக்காளரிடம் ஆவணங்களைக் கோரியதோடு, வீட்டை கொள்வனவு செய்தமை மற்றும் பணம் எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்களையும் இரகசிய பொலிசார் விசாரித்துள்ளனர்.

148 மில்லியன் ரூபாவுக்கு வீட்டினை எவ்வாறு கொள்வனவு செய்தார் என்ற அறிக்கையையும் இரகசிய பொலிசார் பெற்றுக் கொண்டுள்ளனர்.

25.04.2023 அன்று 50 இலட்சம் ரூபாவை செலுத்திய பின்னர், 148 மில்லியன் ரூபா 15 தவணைகளாக 27.12.2023 அன்று வரைக்கும் செலுத்தப்பட்டதாகவும், வாங்கிய வீடு தொடர்பான பத்திரம் பியூமி ஹன்சமாலியின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது பியூமிக்கு சொந்தமான 19 வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டு வருவதாகச் சொத்து விசாரணை பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பியூமி ஹன்சமாலியின் அழகுசாதன நிறுவனத்தின் கிரீம்கள் உள்ளிட்ட பொருட்களை விநியோகிக்கும் வெளி கொரியர் நிறுவனத்தின் தலைவர்களிடம் வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்தக் கொடுக்கல் வாங்கலில் தமக்குத் தொடர்பில்லை எனவும் எமது நிறுவனம் ‘ஆர்டர் செய்யும் போது பொருட்களை விநியோகிக்கும்’ நிறுவனம் மட்டுமே என்றும் அந்தத் தலைவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

ஆனால் அவர்களின் தகவல் வேண்டும் என்று பொலிசார் கூறுகின்றனர்.

அதன்படி, கொரியர் நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த விசாரணை தொடர்பில் பியூமி ஹன்சமாலியின் பிரசாரத்திற்கு ஆதரவளித்த முக்கிய அமைப்பு ஒன்றின் உயர் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர் நடத்தும் தோல் பளபளக்கும் க்ரீமை விற்பனை செய்யத் தனியார் நிறுவனத்திற்கு எப்படி உதவினார் என்பதை அறிந்து கொள்வதற்காக வாக்குமூலம் பெற வருமாறு சொத்து விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்குப் பதிலளிக்கையில் சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில், தனது வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து ஊடகங்களுக்கு எதுவும் கூற முடியாது எனப் பியூமி ஹன்சமாலி நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இதுவரை தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கான சந்தர்ப்பம் அடுத்த வாரத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here