பியுமியின் பெயரில் சொகுசு கார்!

0
7

விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருதானை பிரதேசத்தில் பிரதான வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய இந்தக் கோடீஸ்வர வர்த்தகர் சில காலமாகப் பொலிஸாருக்குத் தெரியாமல் தலைமறைவாக இருந்ததாகவும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் நீண்ட விசாரணையின் பின்னர்க் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here