பறவைக் காய்ச்சலால் 1வது மரணம்!

0
7

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவை காய்ச்சல் காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பறவை காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த 59 வயதான குறித்த அந்த நபருக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மெக்சிக்கோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸின் வெளிப்பாடு தற்போது அறியப்படவில்லை என்றாலும், மெக்சிக்கோவில் உள்ள கோழிகளில் A(H5N2) வைரஸ்கள் பதிவாகியுள்ளன” என்று உலகச் சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here