சுகயீன விடுமுறையை அறிவித்து ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கம் நேற்று (12) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று (13) நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் சிந்தகப் பண்டார தெரிவித்தார்.
அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிப்பதே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.