இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளை பாதிக்கின்றது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்திய தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் (வைரஸ்) பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும்
முறையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.