மத்திய மாகாணத்தில் உள்ள அம்பியூலன்ஸ் சாரதிகள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்ற முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளையும் நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண அம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து சாரதிகள் சங்கத்தின் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்தார்.