பிரிகேடியர் சந்தன ரணவீரவை மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்துவதற்கு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்குமாறு இராணுவ தளபதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
பிரிகேடியர் சந்தன ரணவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்ய தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த ரிட் மனு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு பெஞ்ச் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.