கென்ய ஆர்ப்பாட்டத்தில் 23 பேர் பலி!

0
4

கென்யாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டுப் பாராளுமன்றத்திற்குத் தீ வைத்து செங்கோலையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

புதிய வரி விதிப்புச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சர்ச்சைக்குரிய நிதி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய நிதி சட்டமூலத்திற்கு அமைய பல அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களுக்குப் பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டமையே கென்ய ஆர்ப்பாட்டத்திற்கான காரணமாகும்.

சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய பதுங்கு குழி வழியாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கென்யாவின் நைரோபி நகரில் பல நாட்களாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சகோதரி அனுமா ஒபாமாவும் ஆர்ப்பாட்டக்காரர்களில் அடங்குகின்றார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்பினரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கென்ய ஜனாதிபதி வில்லியம் ருட்டோ (William Ruto) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கென்ய ஜனாதிபதி கூறினார்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தினால் நிதி சட்டமூலத்தை அந்நாட்டு அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here