கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்விலும் சாதித்து மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமையினைத் தேடிக்கொடுத்தது முனைக்காடு இராமகிருஸ்ணா!

0
9

மேசைப்பந்தாட்டத்தில் மாகாண மட்டத்தில் சாதித்த முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் சார்பாக விளையாடிய மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மேசைப்பந்தாட்ட அணியினர் கிழக்கு மாகாண கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வில் மேசைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்கப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்து கொண்ட முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் சார்பாக விளையாடிய மட்/ மமே / முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவர் அணியினர் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் முனைக்காடு கிராமத்திற்கும் பெருமையினைத் தேடிக்கொடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு வெபர் மைதான உள்ளக அரங்கில் இடம்பெற்ற கிழக்குமாகாண கழகங்களுக்கிடையிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் குழுக்களுக்கு இடையிலான போட்டியில் முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகம் பெண்கள் பிரிவில் 1ம் இடத்தினையும் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தினையும் பெற்றதுடன் இரட்டையர் பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிலும் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக அணியே முதலாவது இடத்தைப் பெற்றுச் சாதித்தது. கலப்பு இரட்டையர் பிரிவிலும் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக அணியே முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது தொடரில் இடம்பெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் பெண்கள் பிரிவிலும் ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தை முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகமே பெற்றது முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் சார்பாக விளையாடிய முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய அணி அனைத்து பிரிவுகளிலும் சாதித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

திறந்த போட்டியாகக் கிழக்குமாகாண கழகமட்ட மேசைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டிருந்த நிலையிலும் பல வருட அனுபவம் மிக்க அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் 11 ல் கல்வி பயிலும் மாணவர் அணி குறுகியகாலப் பயிற்சியுடன் மாகாண மட்டத்தில் சாதித்திருப்பது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here