“.. கொவிட் காலத்தில் ஜனாசாக்களை எரித்தது நீதிமன்ற உத்தரவின் பேரில் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலையில் தெரிவித்திருந்தார். இது ஒரு பச்சப் பொய், நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிடவில்லை. அது கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் முஸ்லிம்களைப் பழிவாங்க உலகச் சுகாதார அமைப்பின் எவ்வித யோசனைகளும் அறிவுறுத்தல்களும் இன்றித் தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட பொய்யான ஒரு குழுவின் தீர்மானம் ஆகும்.
ஏனெனில் 2019ம் ஆண்டும் வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதொன்றாகும். ஜனாதிபதி அவர்களே கள்வர்களுடன் நீங்கள் இருங்கள் ஆனால் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டாம்.
நீரினூடாகக் கொவிட் பரவுகிறது என்றெல்லாம் கதை பரப்பப்பட்டது. நான் அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குத் தொலைபேசி ஊடாகக் கதைத்தேன். அப்போது கேட்டேன், நீரினூடாகக் கொவிட் பரவினால் கொவிட் தொற்றாளர்கள் எல்லாம் ஐடிஎச் வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கிறீர்கள். அங்குள்ள நீரினூடாக முழுக் கொலன்னாவ இற்கும் கொவிட் பரவுமே எனக் கேட்டேன்.. அப்போது மஹிந்த ராஜபக்ஷ கொஞ்சம் இருங்கள் இருங்கள் என்றார்.. பின்னர் இம்ரான்கான் இலங்கை வந்தபோது நாம் ஆர்ப்பாட்டம் செய்தோம் அதற்குப் பின்னரே பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி தருவதாகத் தெரிவித்தார். அது விஞ்ஞானப் பூர்வ தீர்மானம் என்றால் நீதிமன்ற தீர்மானம் என்றால் எப்படி மஹிந்த ராஜபக்ஷ அடக்கம் செய்ய உடனே அனுமதி தந்தார்? எனவே, ஜனாதிபதி அவர்களே கள்வர்களுடன் அம்மனமாக ஆட வேண்டாம்.. ஜனாதிபதி இனவாதி அல்ல, அது உண்மை.. கள்வர்களைக் காப்பாற்ற இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம்..”
நேற்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின்போதே எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.