கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழு அதிகாரம் கொண்ட செயலகமாக தொழிற்படுவதற்கான நடவடிக்கைகளை அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும்
அண்மையில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிதி ஒதுக்கீடு இடைநிறுத்தப்பட்டது போன்ற பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தியும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் கல்முனை பிரதேச மக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
கல்முனைத் தமிழர்களே அம்பாறையில் பலமான ஒரு அரசியல் சக்தியை நீங்கள் உருவாக்காத வரை இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டு தான் இருக்கப் போகின்றது. கடந்த காலத்தில் போலி தமிழ் தேசியவாதிகளின் வார்த்தைகளை நம்பி நீங்கள் ஏமாந்து போய் விட்டீர்கள்.
இனிமேலாவது பலமான ஒரு அரசியல் தலைமையை தமிழர்களுக்காக அம்பாரையில் உருவாக்குங்கள்.
பல்லின மக்கள் செறிந்து வாழும் ஒரு மாவட்டத்தில் நமது தமிழர்களின் பாரம்பரியங்களையும் உரிமைகளையும் எல்லைகளையும் பாதுகாப்பதற்கு அமைச்சுப் பதவியுடன் ஒரு தமிழன் தேவை.
நீண்ட காலமாக எதிர்க்கட்சியிலே இருந்து இருந்து எமது அரசியலை நாம் தேய்த்து சின்னாபின்னம் ஆக்கிவிட்டோம்.
தொடர்ச்சியாக அரசுக்கு ஆதரவாக நாம் செயல்படும்போது மட்டும்தான் இது போன்ற பிரச்சனைகளை நம்மால் வெல்ல முடியும்.
இல்லையென்றால் இவ்வாறு வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்வது மட்டும்தான் நமக்கு கடைசியாக அமையும்.