இன்று நள்ளிரவு மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் எனது செய்திச் சேவை வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் வழமை போன்று இடம்பெறும் எனவும் தற்போது எந்த ஒரு பிரதேசத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.