மடுல்சீமை ஊவகெல பகுதியில் 15 மற்றும் 14 லயன் குடியிருப்பில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 21 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் ஊவகெலை தமிழ் வித்யாலயத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் களத்திற்க்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் .
இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர குடியிருப்பினை அமைப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடனும் பெருந்தொட்ட நிர்வாகத்தினருடனும் தொலைபேசியில் கலந்துரையாடினார்.மேலும் அவர்களுக்குரிய நிவாரண உதவிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு உலர் உணவுப் பொருட்களையும் கையளித்தார்.
தொடர்ந்தும் சீரற்ற காலநிலையின் விளைவாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது ஆகவே அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்றும் நாளைய தினம் (03.01.2024)வடிவேல் சுரேஷ் அவர்களுடைய தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.