உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு உத்தரவு!

0
3

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாததால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பினை வழங்கி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here