உறங்கிக்கொண்டே 300 பேர் உயிரைவிட்ட பரிதாபம்!

0
10

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா.எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கிராம மக்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் பாறைகளும், மரங்களும் அடியோடு பெயர்ந்து கிராமத்தில் இருந்த குடியிருப்புகள் மீது விழுந்தன. முழுக் கிராமமும் மண்ணுக்குள் புதைந்தன. 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. நிலச்சரிவால் கிராமத்துக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலச்சரிவில், 300 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் உணவு இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் தப்பித்தவர்கள் தனது குடும்பத்தினரை தேடி அலையும் சம்பவம் கண் கலங்க வைக்கிறது.

இந்தப் பேரிடர் குறித்து அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபி, ”பேரிடர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here