இலங்கையின் அணு மின்சார உற்பத்தி!

0
8

இலங்கையின் அணுசக்தி துறையில் முதலீடு செய்வதற்குச் சீனா கடுமையாக உழைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அணுசக்தி உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத் திருத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், சீன அணுசக்தி கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் CNNC, ரஷ்யாவின் Rosatom, பிரான்சின் Lectrigde de France மற்றும் டென்மார்க்கின் Seborg ஆகியவை இலங்கையின் அணுமின் நிலையத்திற்கான முன்மொழிவுகளை முன்னர்ச் சமர்ப்பித்த நிறுவனங்களாகும். இதனடிப்படையில் சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான ஏழு நாள் பாதுகாப்பு மீளாய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது. அணுசக்தி நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியமான இடங்களை நிறுவனம் அடையாளம் கண்டதை அடுத்து, சாத்தியமான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்த முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியது.

இதேவேளை, அமெரிக்காவின் அல்ட்ரா நியூக்ளியர் கார்ப்பரேஷன் மற்றும் கனடாவின் நியூக்ளியர் கனடா லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here