அழிவை நோக்கி நகரும் பவளப்பாறைகள்!

0
4

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகச் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகரித்துள்ள வெப்பநிலையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பவளப் பாறை ஆபத்தான நிலையில் காணப்படுவதாக முன்னணி ஆராய்ச்சியாளர் டொக்டர் பெஞ்சமின் ஹென்லி தெரிவித்துள்ளார்.

கடலின் வெப்ப நிலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதால் உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருவதாக அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தது.

அத்துடன், உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் ஐந்தாவது முறையாக வெண்மையடையும் ஆபத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பவளப்பாறைகள் அழிவதைத் தடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here