இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் 5,892 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 1,956 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1,228 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், 86,232 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பொல்லாலை உள்ளிட்ட இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 வயது பல்கலைக்கழக மாணவி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here