இணையத்தில் பல்வேறு வாயிலாகப் பாதிக்கப்படுகின்ற இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உலக அளவில், கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழி பாலியல் சுரண்டலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்தல்,ஆபாச உரையாடல் செய்தல், பாலியல் ரீதியான செயல்களைச் செய்ய வற்புறுத்துதல், டீப்பேக் (Deep fake) வீடியோக்கள் மற்றும் படங்களை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பிளாக்மெயில் செய்து தங்களின் பேச்சுக்கு இணங்க வைத்தல் எனப் பல்வேறான குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக அதிகம் அரங்கேறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தங்களை இளைஞர்கள் போல் காட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர், சிறுமிகளை ஏமாற்றி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here