UGC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இராஜினாமா!

0
5

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இது தொடர்பான இராஜினாமா கடிதங்கள் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் அறிவித்தலின்படி, சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க (தலைவர்) மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த (உப தலைவர்) நேற்று பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

மேலும், ஆணையாளர்களும் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2020 இல் நியமிக்கப்பட்ட தற்போதைய குழுவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here