HPV தடுப்பூசிக்கு பின் அச்சம் தேவையில்லை: சுகாதார அமைச்சு!

0
2
கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் HPV தடுப்பூசிக்கு பின் ஏற்படும் சிறு பக்க விளைவுகள் குறுகிய காலத்திற்குரியவை எனவும், பாடசாலை மாணவிகள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

களுத்துறையில் உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 5 மாணவிகளுக்குக் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் வயிற்று வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு, அவை குறுகிய கால அறிகுறிகள் என்றும், உடனடி மருத்துவச் சிகிச்சை பெற்ற மாணவர்கள் குணமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசியின்போது ஏற்படும் அச்சம் காரணமாக சிறு மயக்க நிலை போன்ற குறுகிய காலப் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here