வசூல் வேட்டை நடத்தும் ‘கல்கி 2898 AD’!

0
6

‘கல்கி 2898 AD’ என்ற அறிவியல் புனைகதை திரைப்படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்துத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரூபாய் 600 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் கல்கி 2898 AD.

இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.

பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பாட்னி, பசுபதி, ஷோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வசூலில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளைப் படைத்து வருகிறது.

‘கல்கி 2898 AD’ திரைப்படம் இந்திய அளவில் இந்திய ரூபாயில் 392.45 கோடியும், உலகளவில் 700 கோடி ரூபாயும் ஒரே வாரத்தில் வசூலித்து, ‘ஜவான்’ திரைப்படத்தின் 600 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி இத்திரைப்படம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

7 ஆம் நாளில் 76% வீழ்ச்சி இருந்தாலும், தெலுங்கு பேசும் பகுதிகளிலிருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் ஈர்க்கக்கூடிய வெளிநாட்டு வசூல் ஆகியவற்றுடன் தொடர்ந்து வலுவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here