போராட்டத்தை கைவிட மாட்டோம்!

0
6

ஆசிரியர் – முதன்மைச் சங்கங்கள் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனக் குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் (02) நடத்தப்பட்ட போராட்டம் பாடசாலை நேரத்தின் பின்னர்ப் பாடசாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட போதிலும் தமது கோரிக்கைகளுக்குக் கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை, நாளை (05) அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்புப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த (01) அன்று பாடசாலைகளுக்கு முன்பாகக் கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிரியர்களின் இந்த ஆர்ப்பாட்டம் குறித்தும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here