வடக்கு, கிழக்கில் சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அவசியம் – சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்து!

0
6

வடக்கு, கிழக்கில் சிங்கள் மக்கள் எதிர்நோக்கும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளால் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்குக் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளரிடம் தமது கோரிக்கை கடிதத்தை நேற்று சமர்ப்பித்ததாகச் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அந்த அமைப்புகளின் பிரதிநிதிகளில் ஒருவரான உபுல் கோணார இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
வடக்கு, கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் நிர்வாக ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

அரச சேவைகளைத் தமது மொழியில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை அங்குக் காணப்படுகிறது.
சிங்கள மக்களுக்குத் தமிழ் பிரதேசங்களில் தொழில் தேவைப்படின் தமிழ் மொழியறிவு அவசியம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிங்கள மக்களுக்குச் சேவையாற்றும் தமிழர்களுக்குச் சிங்கள அறிவு அவசியம் என ஏன் வலியுறுத்தப்படுவதில்லை.

இது சிங்கள நாடு. சொந்த நாட்டில் அநாதைகளாக வாழ வேண்டிய நிலைமைக்கு வடக்கு, கிழக்கில் உள்ள சிங்களவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் சமர்ப்பித்துள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here