ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் நேமம் ஸ்ரீ பரம்ஜோதி ஆலயம் ⁠ மஹா கும்பாபிஷேகம்!

0
7

நேமம் ஸ்ரீ பரம்ஜோதி ஆலயம் ⁠ மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக (28.06.2024) வெள்ளிக்கிழமை இன்று காலை நடைபெற்றது

ஆலய நிர்வாகச் சபையினர் உட்பட ஆயிரக்கணக்கான பக்த பெருகோடிகள் புடைசூழ மஹாகும்பாபிஷேக பெருவிழா காலை 06.30 மணி முதல் 10.30 மணிவரை அமையபெற்ற சுப முகூர்த்த வேளையில் வேத பாராயணங்களுடன் மங்கள மேலங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடந்தேறியது.

கும்பாபிஷேக என்பது கோயில் கட்டமைப்புகளையும் தெய்வங்களையும் புனிதப்படுத்துவதற்கான ஒரு சுத்திகரிப்பு விழாவாகும். குடமுழுக்கு அல்லது கும்பாபிசேகம் (கும்பாபிஷேகம்) ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும். இதன்மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here